தாமரை விதை “மக்கானா “
மக்கானா, தமிழில் தாமரை விதை என்று அழைக்கப்படுகிறது. இதன் ஊட்டச்சத்து காரணமாக பலரும் இதை சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எப்படி சாப்பிடுவது, இன்னும் சுவையான உணவாக இதை எப்படி உட்கொள்வது .
மக்கானாவை வறுத்து பவுடர் போல் பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின் பாலில் கொதிக்க வையுங்கள். க்ரீமியாக கிடைக்கும். பின் அதில் உங்களுக்கு பிடித்த பழங்களை கட் செய்து அதன் மேல் பாதாம் நட்ஸுகளை தூவுங்கள். பின் அதன் மேல் அப்படியே தேனை ஊற்றுங்கள். இப்போது அது கூடுதல் ஆரோக்கியம் நிறைந்த வாய்க்கு ருசியான உணவாகிவிட்டது.
வறுத்த மக்கானாவை பவுலில் சேர்த்து அதோடு கோஸ் இலைகள், காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் டிரெஸ்ஸிங் க்ரீம்கள்( தயிர் அல்லது பனீர் அரைத்து சேர்க்கலாம்) சேர்த்து கலந்துவிட சுவையான மக்கானா சாலட் தயார். பனீர், சிக்கன், சோயா, வேக வைத்த பயிர் வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.
வறுத்த மக்கானாவில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் ஸ்பைசி சாட் பொடிகள் சேர்த்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாப்பிடலாம். கூடுதல் க்ரஞ்சி சுவைக்கு மாதுளை பழம் சேர்த்து மக்கானா சாட் சாப்பிடலாம்.
வறுத்த மக்கானாவில் நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதன் மீது உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா சேர்த்து கலந்து சாப்பிடலாம்.மிக்ஸ் வித் மக்கானா : வறுத்த மக்கானாவுட்ன் நட்ஸ் , விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
பால் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் வறுத்த மக்கானா சேர்த்து கலந்துவிடுங்கள். அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பாயாசம் போல் வந்ததும் இறக்கிவிடுங்கள். இப்போது நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அதில் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம். அசத்தல் சுவையாக மக்கானா கீர் இருக்கும்.
0
Leave a Reply